Wednesday, November 16, 2011

3,000 கி.மீ தூரம் உள்ள இல3,000 கி.மீ தூரம் உள்ள இலக்கை தாக்கும் அக்னி 4 ஏவுகணை சோதனை வெற்றி


அக்னி 4 அதிநவீன ஏவுகணை ஒடிசா மாநிலத்தில் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்திய ராணுவ விஞ்ஞானிகள் அக்னி ரக ஏவுகணை தயாரித்துள்ளனர். அக்னி 1, அக்னி 2, அக்னி 3 ரக  ஏவுகணைகள் சோதனை முடிந்து ராணுவத்தில் சேர்க்கப்பட்டன. இதை தொடர்ந்து அக்னி 2 பிரைம் என்ற பெயரில் அதிநவீன ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகள் தயாரித்தனர். 

இந்த ஏவுகணை 3 ஆயிரம் கி.மீ தூரம் பறந்து சென்று இலக்கை தாக்கக்கூடியது. இந்த ஏவுகணையில் 1 டன் எடை கொண்ட அணு குண்டுகளையும் பொருத்தலாம்.  கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டபோது அது தோல்வியில் முடிந்தது. ஏவிய சில விநாடிகளில்  கடலுக்குள் பாய்ந்தது. இந்த நிலையில், 20 மீட்டர் நீளமுள்ள இந்த ஏவுகணையின் பெயர் அக்னி 4 என்று மாற்றப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

ஒடிசா மாநிலம் உள்ள பாலசோரில் இருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ள வீலர் தீவில் இருக்கும் ஏவுகணை சோதனை தளத்தில் இருந்து அக்னி 4 ஏவுகணை நேற்று மீண்டும் சோதனை செய்யப்பட்டது. காலை 9 மணிக்கு ஏவுகணை ஏவப்பட்டது. இது குறிப்பிட்ட தூரம் பறந்து சென்று இலக்கை சரியாக தாக்கியது. இதையடுத்து, ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 

இது பற்றி விஞ்ஞானி ஒருவர் கூறுகையில்,ÔÔஅக்னி 2 ரக ஏவுகணைகள் 2 ஆயிரம் கி.மீ தூரமும், அக்னி 3 ஏவுகணைகள் 3,500 கி.மீ தூரமும் பறந்து செல்லக்கூடியவை. இடைப்பட்ட தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்குவதற்காக அக்னி 4 ரக பயன்படுத்தப்படும். இலக்கை குறிதவறாமல் தாக்கி அழிக்க வசதியாக நவீன கருவிகள் இந்த ஏவுகணையில் பொருத்தப்பட்டுள்ளனÕÕ என்றார்.

No comments:

Post a Comment