Thursday, November 3, 2011

ஆபரேஷனுக்கு பிறகு நடிகை மனோரமாவின் உடல்நிலை தேறுகிறது

 பழம்பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா, சமீபத்தில் தன் வீட்டிலுள்ள பாத்ரூமில் வழுக்கி விழுந்தார். அவரது தலையில் பலத்த அடிபட்டது. ரத்தம் உறைந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணித்த டாக்டர்கள், நேற்று முன்தினம் அவரது தலையில் சிறிய ஆபரேஷன் செய்து, ரத்தக்கட்டியை அகற்றினர். 75 நிமிடங்கள் நடந்த இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது. 

இதையடுத்து மனோரமாவின் உடல்நிலை தேறி வருகிறது. சர்க்கரை, ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவருக்கு திரவ உணவு அளிப்பதற்காக வாயில் பொருத்தப்பட்டிருந்த டியூப் நேற்று காலையில் அகற்றப்பட்டு, மீண்டும் மாலையில் வைக்கப்பட்டது. காய்ச்சல் குறைந்துவிட்டதாகவும், லேசாக கண்விழித்துப் பார்த்த அவர், தன்னைப் பார்க்க வந்தவர்கள் குறித்து விசாரித்ததாகவும், பிறகு தான் அணிந்துகொள்ள நல்ல புடவை வேண்டும் என்று கேட்டதாகவும் தெரிவித்தனர். மனோரமாவை கமல்ஹாசன், அனுஷ்கா, செந்தில் ஆகியோர் நேரில் பார்த்தனர்.

No comments:

Post a Comment