Van நகரின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட, இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளி 7 ஆக பதிவாகியுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், தெரிவித்துள்ளது. இரண்டு ஹோட்டல்கள் உட்பட, மொத்தம் 18 கட்டடங்கள், இடிந்துவிட்டதாகவும் துருக்கியின் அரசுத் தொலைக்காட்சி, தகவல் வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட Van நகருக்கு, உடனடியாக 30 ஆம்புலன்ஸ் வாகனங்கள், அனுப்பி வைக்கப்பட்டன. நிலநடுக்கம் குறித்த தகவல் கிடைத்ததும், துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் Ahmet Davutoglu, உடனடியாக பேரிடர் ஒருங்கிணைப்பு மையத்துக்குச் சென்று, மீட்புப் பணிகளை, ஆய்வு செய்தார். கடந்த அக்டோபர் 23-ம் தேதி, துருக்கியில், ரிக்டர் அளவில் 7 புள்ளி 7 ஆக ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சுமார் 600 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு, நூற்றுக்கணக்கான முறை, பின் அதிர்வுகள் உணரப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள், கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் 1999-ம் ஆண்டு ஏற்பட்ட, இரு நிலநடுக்கங்களில், சுமார் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

No comments:
Post a Comment