Tuesday, November 15, 2011

அரசு பள்ளி ஆசிரியர்கள் வருகை எஸ்.எம்.எஸ் மூலம் பதிவு


அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியைகள் தினமும் பள்ளிக்கு வந்ததும், முதல் வேலையாக தங்களது வருகை குறித்த விவரத்தை எஸ்எம்எஸ் மூலம் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த நடை முறை தமிழகம் முழுவதும் அமலுக்கு வருகிறது என்று கலெக்டர்கள் மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளின் மாநாடு இரு நாட்கள் நடந்தது. 
மாநாட்டு நிறைவு உரையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா 43 அறிவிப்புகளை வெளியிட்டார். 26வது அறிவிப்பாக, ÔÔஅனைத்து மாவட்டங்களிலும் பள்ளி ஆசிரியர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் வருகை பதிவேடு முறை அமல்படுத்தப்படும்ÕÕ  என்று அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
கடலூரில் அறிமுகம்: இந்த திட்டம் முதலில் கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அதில், காலை 9.30 மணிக்கு ஆசிரியர்கள் பணிக்கு வரும்போது, தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.  தலைமை ஆசிரியர் எவ்வளவு பேர், எத்தனை மணிக்கு வந்தார்கள். யார் வரவில்லை என்ற தகவலை எஸ்எம்எஸ் மூலம் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். அவர் அந்த தகவலை பெற்று, கலெக்டர் அலுவலகத் திற்கு தெரியப்படுத்த வேண்டும். 
அங்கு கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். தினமும் அந்த பட்டியல் கலெக்டரின் பார்வைக்கு வைக்கப்படும். இதற்கு பெற்றோர்கள் வரவேற்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, அரசு டாக்டர்கள், ஊரக வளர்ச்சித்துறை ஆகியவற்றுக்கும்  இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்று கலெக்டர் அமுதவள்ளி அறிவித்தார். ஆனால் எதிர்ப்பு போராட்டம் காரணமாக இது ஆசிரியர்களோடு நிறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment