Tuesday, November 15, 2011

தெலுங்கானா தனி மாநில விவகாரம்:காங்., உயர்மட்டக் குழு ஆலோசனை


காஷ்மீரில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து, நேற்று நடந்த காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது."காஷ்மீரில் அமலில் உள்ள ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்' என, அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா வலியுறுத்தி வருகிறார். இதற்கு ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில், இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதையடுத்து, இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா, மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.தெலுங்கானா பிரச்னை குறித்தும், இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக, இந்த பிரச்னைகள் குறித்து, ஐ.மு., கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டத்திலும் விவாதிக்க, காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment