அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிடம் பாதுகாப்பு என்ற பெயரில் அவரிடம் சோதனை நடத்திய அதிகாரிகள் கலாமின் கோட் மற்றும் ஷூவை பிடுங்கி சென்று எதுவுமில்லை என்ற பின்னர் மீண்டும் திரும்ப ஓப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து மத்திய அரசு கடும் அதிருப்தியைøயும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
இது குறித்து உயர் அதிகாரிகள் வட்டாரம் தெரிவிப்பதாவது: கடந்த செப் மாதம் 29ம் தேதி அப்துல் கலாம் அமெரிக்கா சென்றிருந்தார். நியூயார்க்கில் உள்ள ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் இந்திய விமானம் நின்றது. இந்நேரத்தில் இங்கு வந்த அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகள். யார் இவர் என கேட்டு தொடர்ந்து அவரிடம் சோதனை நடத்த வேண்டும் என்றனர். இவர் இந்தியாவின் ஜனாதிபதி அப்துதுல்கலாம் இவரிடம் சோதனை நடத்த வேண்டிய அவசியமில்லை என உடன் இருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்தது. கண்டுகொள்ளவில்லை. கலாமின் கோட் சூட் மற்றும் ஷூக்ககளை பிடுங்கி சென்றனர். சில நிமிடங்கள் கழித்து சோதனை முடிந்தது கொண்டு செல்லுங்கள் என கொடுத்தனர். இதற்கு கலாம் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
மத்திய அரசு இந்த விஷயத்தை மிக சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். கலாமை பொறுத்த வரையில் இது போன் அமெரிக்க அதிகாரிகளின் கெடுபிடிக்கு 2 வது முறை ஆளாகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க விமானம் ஒன்று டில்லியில் இருந்து கிளம்பும்போதும் இவரிடம் கெடுபிடிகள் காட்டப்பட்டது. இதற்கு எதிர்கட்சியினர் பார்லி.,யில் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.
No comments:
Post a Comment