""இலங்கை கடற்படையால், தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவத்தை தடுத்து நிறுத்த வேண்டும்; தமிழர்கள் மறு குடியரமர்த்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என, இலங்கை அதிபர் ராஜபக்ஷேயிடம் வற்புறுத்தினேன்'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
மாலத்தீவில், சார்க் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு, நேற்று பிரதமர் மன்மோகன் சிங் டில்லி திரும்பினார்.ஏர்-இந்தியா விசேஷ விமானத்தில் பயணம் செய்த அவர், தன்னுடன் பயணம் செய்த பத்திரிகையாளர்களிடம், விமானத்திலேயே பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:மாலத்தீவில் நடந்த சார்க் மாநாடு, மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தெற்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள பிரச்னைகள் பற்றி, விரிவாக விவாதித்தோம். மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், பூட்டான், நேபாளம், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு ஆகிய நாடுகளின் தலைவர்களுடன், தனிப்பட்ட முறையிலும், பேச்சுவார்த்தை நடத்தினேன்.
இலங்கை அதிபர் ராஜபக்ஷேயிடம் பேசும் போது, தமிழக மீனவர்கள், தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்படும் சம்பவம் குறித்து பேசினேன். தமிழக மீனவர்கள் ராணுவத்தால் சுடப்படுவதை, ராஜபக்ஷேயும் கண்டித்தார்.
இந்த பிரச்னை குறித்து, இரு நாட்டு மீனவர்கள் குழுக்களுக்கு இடையே, பேச்சுவார்ததை நடத்த ஏற்பாடு செய்வதாகவும், இரு நாட்டு பிரதிநிதிகள் மட்டத்தில் பேச நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.
இந்த பிரச்னை குறித்து, இரு நாட்டு மீனவர்கள் குழுக்களுக்கு இடையே, பேச்சுவார்ததை நடத்த ஏற்பாடு செய்வதாகவும், இரு நாட்டு பிரதிநிதிகள் மட்டத்தில் பேச நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.
இலங்கையிலேயே, அகதிகளாக முகாம்களில் வசிக்கும் தமிழர்களை, மறு குடியமர்த்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என, ராஜபக்ஷேயிடம் கூறினேன். முகாம்களில் இன்னமும் ஏழாயிரம் பேர் மட்டுமே உள்ளதாகவும், அவர்களும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் என்றும், ராஜபக்ஷே கூறினார்.
பாகிஸ்தான் பிரதமருடன், பயங்கரவாதம், இரு நாட்டு வர்த்தக உறவுகள் குறித்து பேசினேன். பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பதில், அவர் ஆர்வமாக உள்ளார். அதனால், அவரை அமைதி விரும்பி என கூறினேன்.ஜகார்த்தாவில் அடுத்த வாரம், அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்கும் போது, அணு உடன்பாடு உட்பட பல பிரச்னைகள் குறித்து பேசுவேன்.
இவ்வாறு, மன்மோகன் சிங் கூறினார்.
இவ்வாறு, மன்மோகன் சிங் கூறினார்.

No comments:
Post a Comment