Sunday, November 13, 2011

வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும்


சூரியனுக்கு நேர் எதிரே தோன்றிய ஜூபிடர் (வியாழன்) கிரகம் நேற்று இரவு நிலவுக்கு அருகில் தெரிந்தது. இந்த காட்சியை வெறும் கண்களால் பார்த்து மக்கள் உற்சாகம் அடைந்தனர். வானத்தில் பொதுவாக நாம் கண்ணால் பார்க்கும் கிரகம்தான் வியாழன். ஆனால் இதுதான் வியாழன் என்பது நமக்கு அவ்வளவாக தெரியாது. 

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பரில் தெரிவது இயற்கைதான். கடந்த அக்டோபர் 29ம் தேதி வியாழன் கிரகம் சூரியனுக்கு நேர் எதிர் திசையில் தோன்றியது. இது பூமியில் இருக்கும் நமக்கு மிக அருகில் தெரிந்தது. அன்று ஒருநாள் மட்டும் நமக்கு அருகில் தெரிந்த அந்த வியாழன் கிரகம், பிறகு தள்ளிப் போகத் தொடங்கியது. இதற்கு காரணம் பூமி சுற்றுவதுதான். 

வியாழன் பொதுவாக மாலை நேரங்களில் தெளிவாக தெரியும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் கிழக்கு வானில் இரவு நேரங்களில் ஜொலிக்கும். மேலும், பூமி சுற்றுவது போல நிலவும் சுற்றுவதால் இப்போது வியாழன் கிரகம் நிலவுக்கு அருகில் தெரிகிறது. இரவு நேரத்தில் அருமையாக இருக்கும். 

இப்போது கிழக்கு திசையில் தெரியும் இந்த கிரகம் போகப்போக மேற்கு திசையில் தெரியத் தொடங்கும். கடந்த அக்டோபர் மாதத்தில் சூரியன் மறைந்த பிறகு தோன்றிய இந்த வியாழன் கிரகம், இனிமேல் சூரியன் மறைவதற்கு 20 நிமிடம் முன்னதாக தோன்றும். ஆனால் இருட்டிய பிறகுதான் நாம் தெளிவாக பார்க்க முடியும்.


No comments:

Post a Comment