Sunday, November 13, 2011

அத்யாவசிய மருந்துகள் விலை குறைவு


கேரள மாநில அரசின், மருந்துகள் விநியோக நிறுவனம் அத்யாவசிய மருந்துகளின் விலையைகுறைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அங்கீகாரம் பெற்ற மருந்துகடைகளுக்கு இந்நிறுவனம் அதிக அளவில் விற்பனையாகும் 2000 வகையான மருந்துகளின் விலையை 25 முதல் 30 சதவீதம் வரை குறைத்து வழங்க திட்டமிட்டுள்ளது. இதில் இதய, சிறுநீரக மற்றும் நரம்பு மண்டல நோய்களின் மருந்துகளும் அடங்கும். சர்க்கரை நோய்க்கான மருந்தின் சந்தை மதிப்பைவிட மூன்றுமடங்கு குறைந்த விலையில் மருந்து வழங்கவும் அரசின் மருந்துகள் விநியோக நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 250 மருந்துகடைகளுக்கு குறைந்த விலையில் மருந்துகளை வழங்க ரூ. 200 கோடி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment