சர்வேதேச விமான கண்காட்சி ஐக்கிய அரசு எமிரேட்ஸ் நாடான துபாயில் துவங்கியது. முதல் நாளிலயே 50 விமானங்களை புக்கிங் செய்தது துபாய் அரசு. ஆண்டு தோறும் விமான கண்காட்சிகள் ஆசிய, ஐரோப்பா போன்ற நாடுகளில் தான் நடைபெறுவது வழக்கம்.இம்முறை வளைகுடா நாட்டில் நடந்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட் நாடான துபாயில் நேற்று கோலாகலமாக துவங்கியது. இங்கு பல்வேறு நாடுகளின் விமான தயாரிப்பு மற்றும் உதிரி பாகங்களின் காண்காட்சி நடந்தது. மொத்தம் 5 நாட்கள் (17-ம் தேதி வரை) நடக்கும் இந்த கண்காட்சியில், 120-க்கும் மேற்பட்ட நாடுகளின் விமானங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்து. முன்னதாக விமான சாகச நிகழ்ச்சிகள் நடந்தன.
பின்னர் அமெரிக்காவின் 777 ரக போயிங்க் விமானங்களை வாங்க துபாய் அரசு முடிவு செய்து அதற்கான ஆர்டரினை கொடுத்து. இதன் மொத்த மதிப்பு 18 பில்லியன் டாலராகும். மொத்தம் 30 முதல் 50 விமானங்களை வாங்க ஆர்ட் செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம், அராப் எமிரேட்ஸ் தலைவர் ஷேக் அகமது பின்-மக்தும், போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்தின் பிரதிநிதிகளிடையே நேற்று கையெழுத்தானது.
No comments:
Post a Comment