பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ், கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.இந்நிறுவனம், எச்.பி.சி.எல் நிறுவனத்திடம் விமான எரிபொருள் வாங்கிய வகையில், 130 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால், பெட்ரோல் தர அந்நிறுவனம் மறுத்துவிட்டதையடுத்து, சென்ற மாதம், கிங்பிஷர் நிறுவனம் பல விமானச் சேவைகளை ரத்து செய்தது.
தற்போது, இந்நிறுவனம் அன்றாடம் பணம் கொடுத்து பெட்ரோலை பெற்று வருகிறது. இந்நிலையில்,டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்மற்றும் ஐதராபாத் விமான நிலையங்களை பயன்படுத்திய வகையில், கிங்பிஷர் நிறு வனம்,ஜி.எம்.ஆர் குழுமத்தால், பராமரிக்கப்படும் இந்த விமான நிலையங்களுக்கு,90 கோடி ரூபாய் தர வேண்டி யுள் ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், டெல்லி விமான நிலைய பயன் பாட்டிற்கான தொகைக்கு பின்தேதியிட்ட காசோலையை கிங்பிஷர் நிறுவனம் கொடுத்தது. ஆனால், அந்த காசோலைகள், வங்கியில் பணமில்லாமல் திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அன்றாடம் பணம் கொடுத்து விமான நிலையங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஜி.எம்.ஆர். திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. அதன்படி, செயல்பட்டு வந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ், தற்போது அந்த தொகையை கூடதர திணறுவதாக கூறப்படுகிறது.இந்நிலையில், கடந்த 4 நாட்களாக கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், 120க்கும் மேற் பட்ட விமான சேவைகளை ரத்து செய்து விட்டது. விமானங்களில் வர்த்தகப் பிரிவில் கூடுதல் இருக்கைகளை சேர்க்கும் பணிக்காக, சேவை ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்ற வியாழனன்று மட்டும்,பெங்களூரில் 21 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், ஏராளமான பயணிகள் அவதிக்கு ஆளாகினர். விமான சேவை ரத்து செய்யப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்குமாறு கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதனிடையே, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பல விமானிகள், ஊழியர்கள் பணியில் இருந்து விலகி, கோ-ஏர் விமான நிறுவனத்தில் சேர்ந்து வருகின்றனர். இதனால் கடன் நெருக்கடிமட்டுமின்றி, விமானங்களை இயக்கு வதிலும் கிங்பிஷர் சிக்கலைசந்தித்துள்ளது.
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 7,000 கோடி ரூபாய் அளவிற்கு கடன் உள்ளதாக கூறப்படுகிறது.சில மாதங்க ளுக்கு முன்,இந்நிறுவனத்திற்கு கடன் வழங்கிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள்,30 சதவீத கடன் தொகையை, நிறுவனத்தில் கொண்டுள்ளபங்கு மூலதனமாக மாற்றிக் கொண்டன. ஒரு சில நிறுவனங்கள், வட்டியை குறைத்து, கடனை திரும்பச் செலுத்தும் காலத்தை நீட்டித்துள்ளன.தற்போது கிங்பிஷர் நிறுவனம், பெயரளவில் மட்டுமே கிங் (ராஜா) ஆக உள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஏர்-இந்தியாவின் முந்தைய சின்னமும் மகாராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment