Monday, November 14, 2011

மம்தா மோகன்தாஸ்க்கு டிசம்பர் 28ம்தேதி கல்யாணம்!



நடிகை மம்தா மோகன்தாஸ் திருமணம் வரும் டிசம்பர் மாதம் 28ம்தேதி நடைபெற உள்ளது. தனது உறவினர் பிரஜீத்தை மணக்கப்போகிறார் மம்தா. சிவப்பதிகாரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை மம்தா. இவருக்கும், அவரது உறவினர் பிரஜீத்துக்கும் திருமண நிச்சயதார்த்தம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மணமகன் இல்லத்தில் இருதினங்களுக்கு முன்னர் நடந்தது. நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். மம்தாவுக்கு பிரஜீத் மோதிரம் அணிவித்தார்.

இது குறித்து மம்தாவின் தாயார் அளித்துள்ள பேட்டியில், மாப்பிள்ளை பெற்றோர் - புதிய பங்களா வீடு கட்டியுள்ளனர். அந்த வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது. மம்தா - பிரஜீத் திருமணத்தை அடுத்த மாதம் (டிசம்பர்) 28ம்தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம், என்று கூறியுள்ளார். திருமணத்துக்கு பிறகு மம்தா, சினிமாவுக்கு முழுக்கு போடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment