இந்தியா-சீனா இடையே மூன்றாவது முறையாக ராணுவ போர் ஒத்திகை விரைவில் துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து இந்திய ராணுவ உயரதிகளின் தரப்பில் கூறப்படுவதாவது: இந்தியா- சீனா இடையே நல்லுறவு வலுப்பபெறும் விதமாக அடுத்த ஆண்டு ராணுவ போர் ஒத்திகை துவங்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை வரும் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் இறுதி செய்யப்படவுள்ளது.
ஏற்னவே இந்தியா- சீனா இடையே எல்லைப்பிரச்னை தீர்க்கப்படாமல் உள்ளது. இதற்காக 2005-ம் ஆண்டிலிருந்து 14 சுற்று பேச்சுவார்ததைகள் நடந்துள்ளது. எல்லைப்பிரச்சனை தற்போது மூன்றாவது கட்டத்தில் உள்ளது. இதை தொடர்ந்து முதன்முறையாக கடந்த 2007-ம் ஆண்டு சீனாவில் போர் ஒத்திகை நடந்தது. பின்னர் 2008-ம் ஆண்டு கர்நாடகாவின் பெல்காம் மாவட்டத்தி்ல் நடந்தது. அதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு 2012-ம் ஆண்டு மூன்றாவது முறையாக போர்ஒத்திகை நடக்கவுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சீனா சென்ற பிரதமர் மன்மோகன்சிங் , இதற்கான முறையான பேச்சுவார்த்தையினை நடத்தினார். பின்னர் கடந்த ஜூன் மாதம் இந்தியாவி்ன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ராஜ்ட்ரீய ரைபிள் படையின் மேஜர் ஜெனரல் குர்மீத்சிங் தலைமையிலான குழுவினர் சீனாவின் ஷாங்காய், உரும்கயூ நகரங்களுக்கு சென்று சீனா ராணுவ உயரதிகாரிகளை சந்தித்து பேசினர் அப்போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மூன்றாவது முறையாக இந்தியா-சீனா இடையே போர் ஒத்திகை நடக்கிறது.
முன்னதாக கடந்த 2009-ம் ஆண்டு சீனா தனது 60-வது குடியரசு தினம் கொண்டாட்டத்தையொட்டியும், கடந்த 2010-ம் ஆண்டு ஜம்முகாஷ்மீ்ர் மாநிலத்தைச் சேர்ந்த ஜஸ்வால் என்ற ராணுவ அதிகாரிக்கு விசா வழங்க மறுத்ததால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து இரண்டு வருடம் இந்தியாவுடன், சீனா போர் ஒத்திகையை நடத்தவி்ல்லை. நேற்று முன்தினம் சீனாவிடமிருந்து 2 அணு உலைகளை வாங்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.இதனைத்தொடர்ந்து சீனாவுடன் இந்தியா எப்போதும் நட்பு நாடு என்பதனை நிரூபிக்கும்விதமாக இந்த போர் ஒத்திகையினை இந்தியா நடத்தவுள்ளதாகவும் இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.

No comments:
Post a Comment