அணு மின்நிலையத்தை சுற்றிப்பார்த்துவிட்டு அப்துல்கலாம் பத்திரிகையாளர்களிடம் பேசினார். அவர் அப்போது கூறுகையில்: பாதுகாப்பு பணிகள் முழு திருப்தி அளிக்கிறது. நான் இந்த அணு மின் நிலையத்திற்கு தற்போது 2 வது முறை வந்திருக்கிறேன். இன்று அணுமின் நிலைய அதிகாரிகளுடன் பல மணி நேரம் ஆலோசித்தேன். இந்த அணுமின் நிலையம் முழு பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதி நவீன பாதுகாப்பு இருப்பதால் கதிர்வீச்சு வெளியாகாது. சுனாமி, பூகம்பம் போன்ற நிகழ்வின்போதும் எவ்வித பாதிப்பையும் தராது. இது இப்பகுதி மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றார்.
No comments:
Post a Comment