Monday, November 7, 2011

தமிழ்நாட்டில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

வீராபுரத்தில், தமிழ்நாடு சிறப்புக் காவல் 15-வது படைப் பிரிவின் தலைவராக இருந்த என்.எம். மயில்வாகனன், சென்னை நில ஆக்கிரமிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட எஸ்.பி.,யாக இருந்த ஜே. பாஸ்கரன், மணிமுத்தாறு சிறப்பு காவல்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். மணிமுத்தாறு சிறப்பு காவல்படையில் இருந்த ஜே. ராஜேந்திரன், கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த எம்.எஸ். முத்துசாமி, சேலம் மாவட்ட கண்காணிப்பாளராகவும், அரியலூர் மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த ஆர். கண்ணப்பன், சென்னை வண்ணாரப்பேட்டை இணை ஆணையராகவும், நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த எஸ். பாஸ்கரன், மதுரை போக்குவரத்துத்துறை இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த சி. ராஜேந்திரன், மதுரை குற்றப்பிரிவு இணை ஆணையராகவும், வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த எஸ். பட்டாபி, புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த டி. மகேஷ் குமார், அம்பத்தூர் இணை ஆணையராகவும், வீராபுரத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த கே.வி. கபிலன், சென்னை மாநகர காவல் துறை கட்டுப்பாட்டுப் பிரிவின் இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று சென்னை, மதுரை குற்றப்பிரிவு மற்றும் சி.ஐ.டி. பிரிவுகளிலும் மற்ற அதிகாரிகள் செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment