ஐரோப்பிய நிதி நெருக்கடிக்கு தீர்வு காண கடுமையான நடவடிக்கைகள் உடனடி அவசியம் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
ஜி20 நாடுகள் அமைப்பின் உச்சி மாநாடு, பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. அதில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங் நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டு கேன்ஸ் சென்றார். முன்னதாக, பிரதமர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கேன்ஸ் ஜி20 மாநாடு குறித்து உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு உள்ளது. வலிமையான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம் பொருளாதாரத்தை சரியான பாதையில் மீண்டும் நிலைநாட்ட இந்த மாநாடு பயன்பட வேண்டும். ஐரோப்பிய நாடுகளிலும் வேறு சில இடங்களிலும் இப்போது நிலவும் பொருளாதார சவால்களை சமாளிக்க கடினமான முடிவுகள் எடுக்க வேண்டியது உடனடி அவசியம்.
கடன் நெருக்கடிக்கு தீர்வு காண எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அதிகம். உலக சந்தைகளில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அவை அமைய வேண்டும். ஐரோப்பிய யூனியனின் செழிப்பை இந்தியா விரும்புகிறது. ஏனெனில், ஐரோப்பாவின் வளர்ச்சி இந்தியாவின் செழிப்புடன் இணைந்தது.
சர்வதேச நிர்வாக நடைமுறைகள் மற்றும் உலக நிதி மற்றும் சீர்திருத்தங்களை முன்னெடுத்து செல்வதில் சிறந்த பங்களிப்பதற்கு மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக உள்ளது. ஜி20 மாநாட்டில் முக்கிய விஷயங்கள் பற்றி இந்தியா தனது கருத்துகளை தெளிவாக எடுத்துரைக்கும். இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment