சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சரக்குகள் கொண்டு செல்லும் ஆளில்லா விண்கலத்தை, ரஷ்யா அனுப்பியது.
ரஷ்யா நேற்று முதன் முதலாக வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ரஷ்யா சார்பில் சரக்குகள் கொண்டு செல்லும் விண்கலம் ஒன்று, கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. எனினும், அந்த விண்கலம் பாதியில் விழுந்து, பரிசோதனை தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து, விண்கலம் விழுந்ததற்கான காரணங்கள் ஆராயப்பட்டு, புதிய விண்கலத்தில் அந்த குறைகள் களையப்பட்டன. இதையடுத்து, எம்-13 எம் என்ற புதிய விண்கலம் நேற்று, கஜகஸ்தான் நாட்டில் உள்ள பைக்கனுர் என்ற இடத்தில் இருந்து ஏவப்பட்டது.இதில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்குத் தேவையான சரக்குகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த விண்கலம் நாளை மறுநாள் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடையும்.

No comments:
Post a Comment