Wednesday, November 9, 2011

தங்கத்தின் விலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 496 ரூபாய் அதிகரித்துள்ளது.


நேற்றைய விலையோடு ஒப்பிடும்பொழுது தங்கத்தின் விலையில் 2 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் உள்ள கடன் பிரச்சினையாலும், அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்துள்ளதும் தங்கத்தின் ஏற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளன. இன்று ஒரு அவுன்ஸ் தங்கம் 1, 790 அமெரிக்க டாலர் என்ற அளவில் விற்பனையாகிறது. குறுகிய காலத்தில் இது ஆயிரத்து 800 டாலருக்கும் மேல் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு 496 ரூபாய் உயர்ந்து, 21 ஆயிரத்து 576 ரூபாய்க்கும், 24 காரட் சொக்கத் தங்கம் கிராமுக்கு 67 ரூபாய் உயர்ந்து 2 ஆயிரத்து 885 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக சரிவில் இருந்த வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ஆயிரத்து 690 ரூபாய் அதிகரித்து 57 ஆயிரத்து 455 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

No comments:

Post a Comment