Thursday, November 10, 2011

சென்செக்ஸ் 200 புள்ளி சரிவு



இந்திய பங்குச் சந்தைகளில் சென்செக்ஸ் நேற்று 207 புள்ளிகளை இழந்து 17,362ல் முடிந்தது. நிப்டி 68 புள்ளிகளை இழந்து 5,221ல் முடிந்தது. குறிப்பாக வங்கித் துறை பங்குகள் அதிகபட்சமாக 2.6 சதவீதம் சரிந்தது. ஸ்டேட் பாங்க் பங்கு அதிகபட்ச (6.7%) இழப்பை சந்தித்தது. சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட சரிவு மற்றும் சர்வதேச தர நிர்ணய நிறுவனமான மூடிஸ், இந்திய வங்கிகளின் எதிர்காலம் பற்றிய மதிப்பீட்டை குறைத்தது ஆகிய காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகள் சரிந்தன. இதற்கு வங்கிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment