நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு நாளை பிரசவம் நடக்கிறது. நடிகை ஐஸ்வர்யா ராய் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த ஆண்டின் விசேஷ தினமாக கருதப்படும் நாளை (11&11&11) அவருக்கு பிரசவம் நடக்கிறது. இதற்காக மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருடன் கணவர் அபிஷேக், அமிதாப் பச்சன், மாமியார் ஜெயாபச்சனும் தங்கியுள்ளனர்.
மருத்துவமனை பாதுகாவலர்கள் 6 மணி நேரத்துக்கு பதிலாக 12 மணி நேரம் பணியாற்றும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. தவிர, தனியார் பாதுகாப்பு நிறுவன செக்யூரிட்டிகளும், போலீசாரும் மருத்துவமனை வளாகத்தில் குவிக்கப்பட்டு உள்ளனர். ஐஸ்வர்யா ராய், அவருடைய குடும்பத்தினரையோ யாரும் படம் எடுத்துவிடக் கூடாது என்பதற்காக, அவர்கள் தங்கியிருக்கும் அறைக்குள் செல்போன் எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகம் தடை விதித்துள்ளது.

No comments:
Post a Comment