ஆம்னி பஸ்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுகின்றன. இதை தொடர்ந்து ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், ஆம்னி பஸ்கள் அனைத்திலும் வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும். 90 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்ல கூடாது என்று ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. வேக கட்டுப்பாடு கருவியை வரும் 22ம் தேதிக்குள் பொருத்த வேண்டும்.
தவறினால் ஆம்னி பஸ் பெர்மிட்டை ரத்து செய்ய வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மற்ற கனரக வாகனங்கள் 3 மாதத்துக்குள் வேக கட்டுப்பாடு கருவியை பொருத்த வேண்டும் என்றும் ஐகோர்ட் கூறியுள்ளது. கோவை சரகத்தில் 126 ஆம்னி பஸ்கள் உள்ளன. கோவை தெற்கில் 32, கோவை வடக்கில் 20, கோவை சென்ட்ரலில் 63, திருப்பூர் வடக்கில் 6, திருப் பூர் தெற்கில் 3, ஊட்டியில் 2 என 126 ஆம்னி பஸ்களு க்கு கோவை சரகத்தில் பெர் மிட் வழங்கப்பட்டுள்ளது.
படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்களுக்கு தமிழகத்தில் பெர்மிட் வழங்கப்படுவது இல்லை. ஆனால் வெளி மாநிலங்களில் பெர்மிட் வாங்கி தமிழகத்தில் பல இடங்களுக்கு சிலிப்பர் கோச் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment