Tuesday, November 15, 2011

நடப்பு 2011-12ம் நிதியாண்டில் இருசக்கர வாகன துறை 13 சதவீதம் வளர்ச்சி காணும்


நடப்பு 2011-12ம் நிதியாண்டில், இரு சக்கர வாகன துறை 13 சதவீத அளவிற்கு வளர்ச்சி காணும் என, மோட்டார் வாகன தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
நடப்பு நிதியாண்டின், செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், இரு சக்கர வாகன துறை, 17.3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், இத்துறை, வரும் 2015-16ம் நிதியாண்டிற்குள், 10 முதல் 12 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2.10 கோடி முதல் 2.30 கோடி வரையிலான வாகனங்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு வளர்ச்சி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பணவீக்கம், எரி பொருள் மற்றும் வட்டி விகித உயர்வு ஆகியவை மோட்டார் வாகன துறையை அதிகமாக பாதித்துள்ளது. இருப்பினும், இரு சக்கர வாகன துறையில் இதன் பாதிப்பு சிறிதளவே காணப்படுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, இரண்டாவது காலாண்டில், இத்துறை இரட்டை இலக்க வளர்ச்சியை ( 17.3 சதவீதம்) கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.எனவே, நடப்பு நிதியாண்டில் மட்டுமின்றி, இனி வரும் ஆண்டுகளிலும் இத்துறையின் வளர்ச்சி இரட்டை இலக்க அளவிலேயே இருக்கும் என, அந்த ஆய்வாளர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment