Tuesday, November 15, 2011

டிராவிட், லஷ்மண் அசத்தல் இந்தியா அமர்க்கள ஆரம்பம்


 வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்டில் ராகுல் டிராவிட், லஷ்மண் அபாரமாக விளையாட இந்தியா வலுவான ஸ்கோரை எட்டியது.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று, 1&0 என்ற முன்னிலை வகிக்கிறது. 2வது டெஸ்ட் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. சேவக் வழக்கம் போல் அதிரடியுடன் ஆட்டத்தை தொடங்கினார். விரைவாக ரன் விளாசிய அவர், விரைவாகவே விக்கெட்டையும் பறிகொடுத்தார். 8 பவுண்டரியுடன் 38 ரன் எடுத்து அவுட் ஆனார். அடுத்ததாக கம்பீர், டிராவிட் ஜோடியும் விரைவாக ரன் சேர்த்தது.
உணவு இடைவேளை வரை அனல் பறந்த ஆட்டம் பின்னர் வேகம் குறைந்தது. அரைசதம் அடித்த கம்பீர் 65 ரன்னில் வெளியேறினார். 100வது சதம் கனவுடன் களமிறங்கிய சச்சின் இம்முறையும் ரசிகர்களை ஏமாற்றினார். 38 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ஜோடி சேர்ந்த டிராவிட், லஷ்மண் நங்கூரம் பாய்ச்சினர். அபாரமாக ஆடிய டிராவிட் சதமும், லஷ்மண் அரைசமும் அடித்தனர். ஆட்ட நேரம் முடிய கடைசி 2 ஓவர் இருந்த நிலையில் டிராவிட் (119) விக்கெட்டை பறிகொடுத்தார். நைட் வாட்ச்மேனாக வந்த இஷாந்த் சர்மா முதல் பந்திலேயே வெளியேறினார்.
முடிவில், 87.3 ஓவரில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 346 ரன்களுடன் இருந்தது. லஷ்மண் 73 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

No comments:

Post a Comment